Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தி.மு.க., ஆட்சியில் விதவைகள் அதிகரிப்பு: முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டி

 தி.மு.க., ஆட்சியில் விதவைகள் அதிகரிப்பு: முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டி

 தி.மு.க., ஆட்சியில் விதவைகள் அதிகரிப்பு: முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டி

 தி.மு.க., ஆட்சியில் விதவைகள் அதிகரிப்பு: முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டி

ADDED : டிச 01, 2025 06:04 AM


Google News
Latest Tamil News
மதுரை: விதவைகள் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது தான் தி.மு.க., ஆட்சியின் சாதனை என, மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்தார்.

மதுரை நகரில் எஸ்.ஐ.ஆர்., பணிகளை அ.தி.மு.க., நகர் பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ ஆகியோர் ஆய்வு செய்தனர். பின் வளர்மதி கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி. மு.க.,வுக்கு பல சோதனைகள் வந்துள்ளது. அவற்றை தனதாக்கி தாங்கிக்கொண்டவர் பொதுச் செயலாளர் பழனிசாமி. தி.மு.க.,வுடன் சில துரோகிகள் கைகோர்த்துக் கொண்டு ஜெ.,வின் கனவை சிதைக்கும் வகையில் சதியில் ஈடுபடுகின்றனர்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் தனிக்கட்சி துவக்கி அ.தி.மு.க.,வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனது தான் வரலாறு. அ.தி.மு.க.,வால் அடையாளம் பெற்றவர்கள் இரும்புக்கோட்டையில் காகித பந்தை வீசி சேதப்படுத்த நினைக்கின்றனர். அது நடக்காது. 2021 ல் தமிழகத்தில் மதுபோதையால் இளம் விதவைகள் அதிகரிப்பதாக கனிமொழி எம்.பி., பொய் பிரசாரம் செய்தார். இன்று விதவைகள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

குழந்தைகளுக்கு எதிராக 61 சதவீதம் குற்றங்கள் அதிகரித்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேலான பாலியல் சம்பவங்கள் நடந்த நிலையில், மாணவிகளே அதிகம் பாதித்துள்ளனர். இதுதான் தி.மு.க.,வின் சாதனை. எதிர்க்கட்சியாக இருந்த போது கூச்சலிட்ட கனிமொழி, தற்போது ஏன் குரல் எழுப்பவில்லை என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us