கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
ADDED : மே 26, 2025 07:37 AM

இன்று விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு, அவர்களே விலையை தீர்மானிக்க முடியாது; அவற்றை வாங்குகிறவன் தீர்மானிக்கிறான்.
விவசாயத்தில் விளைந்த பொருட்களை பயன்படுத்திய வரையில், எங்கேயாவது ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்ததா? ஆனால், இன்று சர்க்கரை நோய் இல்லாதவர்கள் யாரும் இல்லை. காரணம், ரசாயன உணவுப் பொருள்.
'கள்' போதை பொருள் என்றால், அரசு மதுபான கடையில் விற்பனை செய்வது என்ன புனித நீரா, கோவில் தீர்த்தமா? 'கள்' உணவின் ஒரு பகுதி. அதை குடித்து இறந்தோர் யாரும் இல்லை. நான் கல்லுாரிக்கு போகும்போது, 'கள்' குடித்துவிட்டு தான் போவேன்; திரும்ப வரும்போதும் குடிப்பேன். அது, ராஜ வாழ்க்கை.
'கள்' விடுதலைக்கு துணை நிற்பது நாம் தமிழர் கட்சியின் கடமை. ஒரு நாள் நானே, பனை மரம் ஏறி 'கள்' இறக்கி போராட்டம் நடத்தப்போகிறேன்.
- சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்