பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா 'நோட்டீஸ்'
பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா 'நோட்டீஸ்'
பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா 'நோட்டீஸ்'
ADDED : செப் 16, 2025 07:53 AM

சென்னை, : இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை விதித்த நீதிமன்ற உத்தரவை மீறியதாக, குட் பேட் அக்ளி பட தயாரிப்பு நிறுவனமான, 'மைத்திரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனத்துக்கு, நீதிமன்ற அவமதிப்பு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், நடிகர் அஜித் நடிப்பில் குட் பேட் அக்ளி திரைப்படம், சமீபத்தில் வெளியானது.
இந்த படத்தில், தன், 'இளமை இதோ இதோ, ஒத்த ரூபாய் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி' ஆகிய பாடல்களை, அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குட் பேட் அக்ளி படத்தில், இசையமைப்பாளர் இளையராஜவின் பாடல்களை பயன்படுத்த, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
அதை மீறி, இளையராஜா பாடல்களை, சம்பந்தப்பட்ட படத்தில் தொடந்து பயன்படுத்தி வருகின்றனர்.
அதை உடனே நிறுத்த வேண்டும்; நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வதை தவிர, வேறு வழியில்லை எனக் கூறி, இளையராஜா தரப்பில், பட தயாரிப்பு நிறுவனத்துக்கு, நீதிமன்ற அவமதிப்பு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.