சாலையை தடுத்து சுவர் கட்டினால் மனைப்பிரிவுக்கு பதிவு கிடையாது
சாலையை தடுத்து சுவர் கட்டினால் மனைப்பிரிவுக்கு பதிவு கிடையாது
சாலையை தடுத்து சுவர் கட்டினால் மனைப்பிரிவுக்கு பதிவு கிடையாது
ADDED : மே 22, 2025 12:40 AM
சென்னை:'மனைப்பிரிவுகளில் பொது சாலைகளை தடுக்கும் வகையில், 'காம்பவுண்ட்' சுவர்கள் கட்டியிருந்தால், அவற்றை அப்புறப்படுத்தி, அதற்கான புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே பதிவு செய்யப்படும்' என, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
ஆணையம் பிறப்பித்து உள்ள உத்தரவு:
மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்துவோர், அதில் பொது பயன்பாட்டுக்கான சாலைகளை, எந்த விதத்திலும் தடை செய்ய கூடாது. உள்ளாட்சிகளுக்கு சாலைகள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மனைப்பிரிவுகளில் தடுப்பு சுவர்களை எழுப்ப கூடாது.
ஏற்கனவே இதுபோன்ற சுவர்களை எழுப்பி இருந்தால், அவற்றை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும். சுவர், 'கேட்' ஆகியவற்றை அப்புறப்படுத்தி, அதற்கான புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
மனைப்பிரிவு திட்டங்கள் பதிவுக்காக ஆய்வு செய்யும் அலுவலர்கள், 'காம்பவுண்ட்' சுவர்கள், 'கேட்'கள் அப்புறப்படுத்தப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.