மத்திய அரசு ஒன்றிய அரசு என்றால் மாநில அரசு என்ன பஞ்சாயத்து அரசா? மஹாராஷ்டிர கவர்னர் கேள்வி
மத்திய அரசு ஒன்றிய அரசு என்றால் மாநில அரசு என்ன பஞ்சாயத்து அரசா? மஹாராஷ்டிர கவர்னர் கேள்வி
மத்திய அரசு ஒன்றிய அரசு என்றால் மாநில அரசு என்ன பஞ்சாயத்து அரசா? மஹாராஷ்டிர கவர்னர் கேள்வி
ADDED : ஜூன் 16, 2025 04:44 AM

சேலம் : சேலத்தில் மஹாராஷ்டிர கவர்னர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:
மத்திய அரசு, கூட்டுறவுத் துறைக்கு என்று தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு கூட்டுறவு அமைப்பிலும் உண்மையான விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, கூட்டுறவு அமைப்புகள் வலுப்பெறும்.
தற்போது, தமிழகத்தில் கூட்டுறவுத் துறைக்கான நோக்கமே சிதைந்து வருகின்றன. விவசாயிகள், தொழிலாளர்கள், பயனாளிகளை அழைத்து பேசி கூட்டுறவு நிறுவனங்களுக்கு புத்துயிரூட்ட வேண்டும்.
தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் நலிவடைய, அதில் நடக்கும் ஊழல் தான் காரணம்.
தமிழகத்தில் கவர்னருக்கும், அரசுக்கும் இடையே நிலவும் மோதல் போக்குக்கு காரணம், மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது தான்.
இது வேற்றுமை உணர்வை ஏற்படுத்தி, இரு அரசுக்கும் இடையே இடைவெளியை உண்டாக்கிவிட்டது. அதனால், ஒன்றிய அரசு என அழைப்பதை கைவிட வேண்டும். இல்லையெனில், மாநில அரசை பஞ்சாயத்து அரசு என சொல்ல நேரிடும்.
மத்திய அரசின் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை எனில், அது தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடலாம் இவ்வாறு அவர் கூறினார்.