Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 'பழனிசாமி விவசாயி என்றால் நாங்கள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளா?'

'பழனிசாமி விவசாயி என்றால் நாங்கள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளா?'

'பழனிசாமி விவசாயி என்றால் நாங்கள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளா?'

'பழனிசாமி விவசாயி என்றால் நாங்கள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளா?'

ADDED : மார் 25, 2025 12:56 AM


Google News
சென்னை: ''எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி விவசாயி என்றால், நாங்கள் என்ன ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளா,'' என, அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாகக் கேட்டார்.

சட்டசபையில் நேற்று, நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார், பழனிசாமி முதல்வராக இருந்தபோது நீர்வளத் துறையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை குறிப்பிட்டார்.

அப்போது அடிக்கடி பழனிசாமியை, விவசாயி என்றும், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, மேட்டூர் அணையில் இறங்கி வண்டல் மண் எடுத்தார் என்றும் குறிப்பிட்டார்.

அப்போது நடந்த விவாதம்:


அமைச்சர் துரைமுருகன்: பழனிசாமி விவசாயி என்றால், நாங்கள் என்ன ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளா? நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன்; ஏரோட்டியவன்; விவசாய வேலைகள் செய்தவன். பழனிசாமி மட்டும்தான் வேட்டியை மடித்துக் கட்டினாரா? நாங்கள் பேன்ட் போட்டுள்ளோமா?

சபாநாயகர் அப்பாவு: நீங்கள் இருக்கையில் அமர்ந்தவாறு பேச, முதல்வர் விரும்புகிறார். நீங்கள் அமர்ந்து பேசலாம்.

அமைச்சர் துரைமுருகன்: இன்று உடல்நிலை சரியில்லாததால், சட்டசபைக்கு வர முடியுமா என நினைத்தேன். அமர்ந்து பேச அனுமதி அளித்ததற்கு நன்றி.

சபாநாயகர் அப்பாவு: 100 ஆண்டுகள் நோய், நொடியில்லாமல் நலமோடு இருப்பீர்கள்.

அமைச்சர் துரைமுருகன்: அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us