ADDED : மே 22, 2025 01:04 AM
சென்னை: வரும் 27ம் தேதி, 12 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்', என, போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
'புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், ஒப்பந்த நிலுவைத் தொகை வழங்க வேண்டும். ஓய்வு பெற்றதும், பணப்பலன் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுதும், 100 மையங்களில் வரும் 27ம் தேதி, 12 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்', என, போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும், தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.