கமல் சொத்து மதிப்பு எவ்வளவு? வேட்பு மனுவில் சொன்னது இதுதான்!
கமல் சொத்து மதிப்பு எவ்வளவு? வேட்பு மனுவில் சொன்னது இதுதான்!
கமல் சொத்து மதிப்பு எவ்வளவு? வேட்பு மனுவில் சொன்னது இதுதான்!
ADDED : ஜூன் 07, 2025 09:21 AM

சென்னை: ராஜ்யசபா தேர்தல் வேட்பு மனுவில் கமல் தாக்கல் செய்த
சொத்து விவரங்கள் தகவல் வெளியாகி உள்ளது. அதில், தனக்கு நான்கு கார்கள்
உள்ளன. ரூ.49.67 கோடி கடன் உள்ளது என கமல் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில்
ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, வரும் ஜூன் 19ம் தேதி தேர்தல் நடக்க
உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் கமல் நேற்று வேட்பு மனுவை தாக்கல்
செய்தார். அவர் வேட்பு மனுவில் தாக்கல் செய்த சொத்து விவரங்கள்
பின்வருமாறு:
நடிகர் கமல் சொத்து மதிப்பு விபரம் பின்வருமாறு:
* 2023-24ம் நிதியாண்டில் வருவாய்- ரூ.78.90 கோடி.
* அசையும் சொத்துகளின் மதிப்பு- ரூ.59.69 கோடி.
* ஒட்டுமொத்த அசையா சொத்துக்கள்- 245 கோடியே 86 லட்சம் ரூபாய்
4 கார்கள்
* மகேந்திரா பொலிரோ,
* மெர்சிடஸ் பென்ஸ்,
* பி.எம்.டபிள்யூ.,
* லக்சஸ் ஆகிய நான்கு கார்கள் உள்ளன.
இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8.43 கோடி.
ரொக்கம்
கையில் இருக்கம் பணம்: ரூ.2.60 லட்சம்.
கடன்
வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடன் தொகை: ரூ.49.67 கோடி