ஆன்றோரை அவமதிக்கும் அரசு: ஹிந்து முன்னணி கண்டனம்
ஆன்றோரை அவமதிக்கும் அரசு: ஹிந்து முன்னணி கண்டனம்
ஆன்றோரை அவமதிக்கும் அரசு: ஹிந்து முன்னணி கண்டனம்
ADDED : செப் 02, 2025 09:44 PM

திருப்பூர்; அய்யா வைகுண்டர் குறித்து வெளியான தவறான மொழிபெயர்ப்புக்கு தமிழக அரசுக்கு ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
டி.என்.பி.எஸ்.சி., கேள்வித்தாளில் சமூக புரட்சியாளர் அய்யா வைகுண்டர் முடிசூடும் பெருமாள் என்பதை முடி வெட்டும் பெருமாள் என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அவமதித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். பல லட்சம் மக்களின் மதிப்புக்கும், வணக்கத்துக்கும் உரிய அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் நோக்கிலேயே இதுபோன்று மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டுகின்றனர்.
காரணம் ஒவ்வொரு தேர்விலும் தி.மு.க., ஈ.வெ.ரா., அண்ணா, கருணாநிதி பற்றி உயர்வான கருத்து திணிப்பை தொடர்ந்து தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது. ஆனால், சமய பெரியோர்கள் பற்றிய கேள்வி தவறான சித்தரிப்பாக இடம் பெற்று வருகிறது என்று அரசு பணியில் சேரும் இளைஞர்களுக்கு எத்தகைய சிந்தனையை புகுத்துகின்றனர் என்பது இதனால் வெளிப்படுகிறது.
தமிழ்நாடு பாடநுால் கழகத்தின் பாடங்களில் ஈ.வெ.ரா., போன்றவர்களுக்கு பெருமை சேர்க்கும் அடைமொழியில் அமைத்து. வ.உ.சி., - முத்துராமலிங்க தேவர் போன்றோரை தீவிரவாதிகள் என குறிப்பிட்டதையும் பார்த்தோம். இதுபோன்ற மோசமான கேள்வித்தாளை தயாரித்தவர், அதனை சரிபார்த்து அனுமதி அளித்த மேற்பார்வையாளர் மற்றும் அதிகாரிகள் மீதுமுதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய அநாகரிகமான தவறுக்கு முதல்வர் ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அய்யா வைகுண்டர் குறித்து வெளியான தவறான மொழி பெயர்ப்பு, வெறுப்புணர்வின் உச்சம் என, ஹிந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.