ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின் நாளை ஐகோர்ட் திறப்பு
ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின் நாளை ஐகோர்ட் திறப்பு
ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின் நாளை ஐகோர்ட் திறப்பு
ADDED : ஜூன் 01, 2025 05:30 AM
சென்னை: ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின், நாளை முதல் உயர் நீதிமன்றம் வழக்கம் போல இயங்க உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு, மே 1 முதல் ஜூன் 1 வரை, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அது, இன்றுடன் முடிகிறது, நாளை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை மீண்டும் செயல்பட துவங்கும்.
விடுமுறை காலத்தில், மொத்தம் நான்கு அமர்வுகளில், நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன், என்.மாலா, ஜி.அருள்முருகன், என்.செந்தில்குமார், செந்தில்குமார் ராமமூர்த்தி உள்பட, 12 நீதிபதிகள், அவசர வழக்குகளை விசாரித்தனர்.
இதேபோல, மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.தண்டபாணி, பி.பி.பாலாஜி உள்பட, 13 நீதிபதிகள் வழக்குகளை விசாரித்தனர்.
இதற்கிடையில், தமிழகத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட, சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப் பட்ட வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கான தண்டனை விபரங்களை, நாளை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.