தொடரும் கனமழை; மஹாராஷ்டிராவில் 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'!
தொடரும் கனமழை; மஹாராஷ்டிராவில் 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'!
தொடரும் கனமழை; மஹாராஷ்டிராவில் 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'!
ADDED : மே 27, 2025 08:12 AM

மும்பை: மஹாராஷ்டிராவில் ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாப்பூர் மற்றும் சதாரா ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (மே 27) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
மும்பையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால், அந்த நகரமே வெள்ளக் காடானது. பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, ரயில், விமான சேவையும் முடங்கியது.
மஹாராஷ்டிராவில், 35 ஆண்டுகளுக்கு பின், பருவமழை முன்கூட்டியே துவங்கி உள்ளது. தலைநகர் மும்பையில் நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கிய கனமழை, விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. இந்நிலையில், மஹாராஷ்டிராவில் ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாப்பூர் மற்றும் சதாரா ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (மே 27) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
ராய்காட், புனே, பீட், ஹிங்கோலி, நான்டெட் மற்றும் பர்பானி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மும்பை, தானே, ஜல்கான், நாசிக், அஹில்யாநகர், சாங்லி, ஜல்னா மற்றும் மகாராஷ்டிராவின் பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாலையோரங்களில் இருந்த மரங்கள் வேரோடு முறிந்து விழுந்த நிலையில், மின்கம்பங்களும் ஆங்காங்கே சாய்ந்தன. முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மும்பையில் உள்ள குர்லா, சியோன், தாதர், பரேல் ஆகிய பகுதிகள், மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன.