தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
ADDED : ஜன 04, 2024 11:02 PM
சென்னை:தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு, நாளை கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இன்று சில இடங்களில் கன மழையும், பல இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் அதிகாலையில், லேசான பனிமூட்டம் நிலவும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகாலை பனிமூட்டம் நீடிக்கும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக, தேக்கடியில் 7 செ.மீ., மழை பெய்துள்ளது. பெரியாறு 5; சேர்வலாறு அணை, பாபநாசம் 3; தேவாலா, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், மாஞ்சோலை 2; உத்தமபாளையம், பெரியகுளம், கொடைக்கானல், காக்காச்சி 1 செ.மீ., மழை பெய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.