ஓலைச்சுவடிகள் அறக்கட்டளையிடம் ஒப்படைப்பு
ஓலைச்சுவடிகள் அறக்கட்டளையிடம் ஒப்படைப்பு
ஓலைச்சுவடிகள் அறக்கட்டளையிடம் ஒப்படைப்பு
ADDED : செப் 11, 2025 01:39 AM
சென்னை:தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின், சமீபத்தில் ஜெர்மனி சுற்றுப்பயணம் சென்றார்.
அங்குள்ள கொலோன் பல்கலையின் தமிழ் துறையை பார்வையிட்டார். அங்கு பழந்தமிழ் இலக்கிய சுவடிகள் மற்றும் அரிய தமிழ் நுால்கள் பாது காக்கப்பட்டு வருகின்றன.
ஜெர்மனி வந்ததன் நினைவாக, முதல்வர் ஸ்டாலினுக்கு, கொலோன் பல்கலை தமிழ்துறை சார்பில், பழங்கால ஓலைச் சுவடிகள் வழங்கப்பட்டன.
அதனை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலக அறக்கட்டளை அறங்காவலர் பாலகிருஷ்ணன், இயக்குநர்கள் பிரகாஷ் மற்றும் சுந்தர் ஆகியோரிடம், நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் ஒப்படைத்தார்.