ஜி.எஸ்.டி. குறைப்பு மக்களை அடையணும் உறுதி செய்ய அரசுக்கு வானதி வலியுறுத்தல்
ஜி.எஸ்.டி. குறைப்பு மக்களை அடையணும் உறுதி செய்ய அரசுக்கு வானதி வலியுறுத்தல்
ஜி.எஸ்.டி. குறைப்பு மக்களை அடையணும் உறுதி செய்ய அரசுக்கு வானதி வலியுறுத்தல்
ADDED : செப் 24, 2025 05:07 AM

கோவை; மக்கள் சேவை மையம் சார்பில், கணபதியில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்பு துவக்க விழா நேற்று நடந்தது.இதில், பா.ஜ. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது:
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. வரியை குறைக்காமல் சில நிறுவனங்கள் ஒரே விலையில் விற்க வாய்ப்புள்ளது. வரி குறைந்துள்ளதா என, பொதுமக்கள் சோதனை செய்ய வேண்டும்.
விலை வித்தியாச பட்டியலை நிறுவனங்கள் வைக்க வேண்டும். வரி குறைப்பு பலன் அனைவருக்கும் சென்றடைய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வர் பேசாமல் வேடிக்கை பார்க்கிறார்.
ஜி.எஸ்.டி. வருவாய் அதிகரிக்க, ஜி.எஸ்.டி.க்குள் வராத மற்ற பொருட்கள் கொண்டு வரப்படும். மாநில அரசு ஒத்துழைத்தால், பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவோம்.
தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் போட்டி என விஜய் கூறுகிறார். தி.மு.க.வை வீழ்த்தும் ஒரே சக்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்கே உள்ளது. கூட்டணியை பலப்படுத்த, அண்ணாமலை முயற்சி செய்கிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், பா.ஜ. மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், நந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.