Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/விளையாட்டு ஒதுக்கீட்டில் 4 வீராங்கனையருக்கு அரசு வேலை

விளையாட்டு ஒதுக்கீட்டில் 4 வீராங்கனையருக்கு அரசு வேலை

விளையாட்டு ஒதுக்கீட்டில் 4 வீராங்கனையருக்கு அரசு வேலை

விளையாட்டு ஒதுக்கீட்டில் 4 வீராங்கனையருக்கு அரசு வேலை

ADDED : பிப் 23, 2024 08:24 PM


Google News
சென்னை:சர்வதேச, தேசிய, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற 601 வீரர், வீராங்கனைகளுக்கு 16.31 கோடி ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை, உதயநிதி வழங்கினார்.

மேலும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத விளையாட்டு வேலைவாய்ப்பில், கால்பந்து வீராங்கனை ரெங்கநாயகி, வீல்சேர் பென்சிங் வீராங்கனை சங்கீதா, 'வூஸ்' விளையாட்டு வீராங்கனை அகல்யா, வெர்ஜின் ஆகியோருக்கு, வணிக வரி மற்றும் பத்திர பதிவு துறையில் இளநிலை உதவியாளராக அரசுப் பணி நியமன ஆணைகளை, உதயநிதி வழங்கினார்.

பின் அவர் பேசியதாவது:

தற்போதைய பட்ஜெட்டில் 440 கோடி ரூபாய்தான் விளையாட்டு துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. என்றாலும், விளையாட்டு வீரர்களுக்கு எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு ஊக்கத்தொகையையும், விளையாட்டு கருவிகளையும் வழங்கி, ஊக்கப்படுத்துவோம். அரசு நல்ல விளையாட்டு வீரர்களை உருவாக்கும் முயற்சியை எடுக்கிறது. இந்த வசதி, வாய்ப்புகளை பயன்படுத்தி வீரர், வீராங்கனைகள் சாதித்தால் தான் அதற்கு பலன் ஏற்படும்.

தமிழக சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் வாயிலாக 300க்கும் அதிகமான விளையாட்டு வீரர்களுக்கு தனி நபர் மற்றும் குழு போட்டிகளில் பங்கேற்கப்பதற்காக , ஆறு கோடி ரூபாய்க்கு மேல் நிதி அளித்துள்ளோம்.

நீங்கள் அதிகம் சாதிக்க தமிழக அரசும் விளையாட்டு துறையும் உங்களுக்கு துணை நிற்கும். அமைச்சராக மட்டுமின்றி, ஒரு அண்ணணாக, சகோதரனாக, நான் எப்போதும் உங்களுக்கு துணை நிற்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி, கமிஷனர் ஜகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us