Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ காலமுறை பணியாளர்களுக்கு அரசு செய்த நிதி மோசடி: சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் கண்டனம்

 காலமுறை பணியாளர்களுக்கு அரசு செய்த நிதி மோசடி: சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் கண்டனம்

 காலமுறை பணியாளர்களுக்கு அரசு செய்த நிதி மோசடி: சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் கண்டனம்

 காலமுறை பணியாளர்களுக்கு அரசு செய்த நிதி மோசடி: சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் கண்டனம்

ADDED : டிச 01, 2025 06:01 AM


Google News
Latest Tamil News
மதுரை: மதுரையில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயராஜ ராஜேஸ்வரன், பிரெடெரிக் ஏங்கல்ஸ், செல்வகுமார் கூறியதாவது:

தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதங்களில் நிதித்துறை, அரசு துறையில் சிறப்பு காலமுறை ஊதிய ஊழியர்களுக்கு வருங்காலத்தில் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தில் சந்தா பிடிக்க தேவையில்லை என தெரிவித்தது. இதை பழைய ஓய்வூதியத் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கை என நினைத்தோம்.

அரசு துரோகம் இதுகுறித்து வருவாய்த்துறை ஆணையர் அரசிடம் கேட்டதற்கு 12.8.2021ல் அரசின் தெளிவுரையில், 'சிறப்பு காலமுறை பணியாளருக்கு சந்தா பிடித்தம் தேவையில்லை என்பது கிராம உதவியாளருக்கும் பொருந்தும்' என தெரிவித்தது. பின்பு 31.10.2021 கடிதத்தில், 'அவர்களிடம் பிடித்தம் செய்த தொகையை வட்டியுடன் திரும்ப வழங்குமாறு தெளிவுரை வழங்கப்பட்டது.

அத்துடன் அந்த ஊழியர்களின் கணக்கில் 20 ஆண்டுகளாக அரசு செலுத்திய 10 சதவீத பங்குத்தொகையை அவர்களுக்கு வழங்க இயலாது எனக்கூறியது. இது பணியாளர்களுக்கு அரசு செய்யும் துரோகம். சி.பி.எஸ்.,ஐ ரத்து செய்ய போராடியவர்கள் வேறு வழியின்றி சி.பி.எஸ்.,ஐ பிடிக்க வலியுறுத்தி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் 2002 முதல் 2005 வரை 140க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் ஓய்வு பெற்றனர். அவர்களில் 40க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். அவர்களின் சி.பி.எஸ்., இறுதித் தொகையை பெற முயன்றபோது, நிதித்துறையின் தெளிவுரைகள் வரவேண்டியுள்ளதால் அத்தொகையை தர இயலாது என தெரிவிக்கப்பட்டது.

இதை தனியார் நிறுவனம் செய்திருந்தால் மோசடி வழக்கில் சிறை செல்ல வேண்டியதிருக்கும். ஆனால் அரசு இவ்வாறு செய்ததால் யாரிடம் முறையிடுவது என தெரியவில்லை. இதற்காக 3 ஆண்டுகளாக போராடிய அந்த ஊழியர்களுக்கு கடந்த நவ.18 ல் வழங்கிய மற்றொரு தெளிவுரையில் அந்தப் போராட்டத்திற்கும் அரசு முடிவுரை எழுதிவிட்டது. இதன்படி அந்த ஊழியர்களின் கணக்கில் அரசு வழங்கிய குறைந்தபட்ச தொகை ரூ.5 லட்சம் இருந்தால், அது பாதியாக குறையும் நிலை உள்ளது. இது மிகப்பெரிய நிதிமோசடி.

கண்டனம் பிடித்த பணத்தை மட்டுமே திரும்பித்தரும் கொடூரம், அரசு பங்களிப்பு அம்போ என்பதால் இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us