4 நாட்களில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.3000 உயர்வு: பெண்கள் அதிர்ச்சி
4 நாட்களில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.3000 உயர்வு: பெண்கள் அதிர்ச்சி
4 நாட்களில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.3000 உயர்வு: பெண்கள் அதிர்ச்சி
ADDED : ஜூன் 14, 2025 09:52 AM

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்றும் ஏற்றம் காணப்படுகிறது. 4 நாட்களில் சவரன் ரூ.3000 உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்றம் காணப்படுகிறது. தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது.
அதன்படி சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.74,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 9320ஆக இருக்கிறது. கடந்த 10ம் தேதி முதல் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க ஏற்றம் நிலவுகிறது.
ஜூன் 11ம் தேதி ஒரு சவரன் ரூ.72,160 ஆக உயர்ந்தது. அதன் பின்னர் படிப்படியாக அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரன் ரூ.3000 உயர்ந்து இருக்கிறது.
தொடர்ந்து தங்கத்தின் விலை எகிறி வருவது பெண்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. அடுத்து வரக்கூடிய நாட்களிலும் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று தங்க நகை வியாபாரிகள் கூறி உள்ளனர்.