மத்திய அரசுடன் உறவு வைத்து நிதி பெறுங்கள்
மத்திய அரசுடன் உறவு வைத்து நிதி பெறுங்கள்
மத்திய அரசுடன் உறவு வைத்து நிதி பெறுங்கள்
ADDED : மே 25, 2025 03:44 AM
டில்லியில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த, 'நிடி ஆயோக்' கூட்டங்களில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை. அப்போது முறுக்கிக் கொண்டிருந்த முதல்வர், திடுமென மனம் மாறி, இந்த ஆண்டு நடந்த கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார். அது வரவேற்கத்தக்கது.
தமிழகத்திற்கு என்ன நல்ல திட்டங்களை கேட்டு வாங்கி வந்தாலும், அது ஸ்டாலினுக்கு பெருமையாகத்தான் இருக்கும். மத்திய அரசுடன் இணக்கமாக உறவு வைத்து, நிதியை பெற்று, தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று, ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.
இதேபோலவே தேசிய கல்விக் கொள்கையை ஏற்பது உள்ளிட்ட பல விஷயங்களிலும் மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல வேண்டும்.
-- நாகேந்திரன்,
தமிழக பா.ஜ., தலைவர்.