ரூ.98.25 கோடி முறைகேடு வழக்கு; 'மாஜி' அமைச்சர் வேலுமணி பெயர் மீண்டும் சேர்ப்பு
ரூ.98.25 கோடி முறைகேடு வழக்கு; 'மாஜி' அமைச்சர் வேலுமணி பெயர் மீண்டும் சேர்ப்பு
ரூ.98.25 கோடி முறைகேடு வழக்கு; 'மாஜி' அமைச்சர் வேலுமணி பெயர் மீண்டும் சேர்ப்பு
ADDED : செப் 03, 2025 04:13 AM

சென்னை: 'சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98.25 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை, கோவை மாநகராட்சிகளில், பல்வே று பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக கு ற்றச்சாட்டு எழுந்தது.
அப்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, 'ஆதாரங்க ளை சேகரித்தால், அவருக்கு எதிராக மீண்டும் வழக்கு தொடரலாம்' என, தெரிவித்திருந்தது.
இந்நிலையில், 'ஒப்பந்த முறைகேடு தொடர்பாக, அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்களுக்கு எதிரான வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை' என, மனுதாரரான அறப்போர் இயக்கம் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனு:
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர் மீது வழக்கு தொடர சபாநாயகர் அப்பாவு, 2024 பிப்., 12ல் அனுமதி அளித்துள்ளார்.
அதன்படி, அவர் பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான கந்தசாமி, விஜய கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர, மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, வழக்கின் விசாரணையை வரும், 12ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.