Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/புதன் ஸ்தலத்தில் மனம் உருக வழிபட்ட வெளிநாட்டு பக்தர்கள்!

புதன் ஸ்தலத்தில் மனம் உருக வழிபட்ட வெளிநாட்டு பக்தர்கள்!

புதன் ஸ்தலத்தில் மனம் உருக வழிபட்ட வெளிநாட்டு பக்தர்கள்!

புதன் ஸ்தலத்தில் மனம் உருக வழிபட்ட வெளிநாட்டு பக்தர்கள்!

Latest Tamil News
மயிலாடுதுறை:சீர்காழி அருகே புதன் ஸ்தலமான சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் மனமுருக சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

உலக அமைதி வேண்டியும், மக்கள் நிம்மதியாக வாழ்வதற்காகவும் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, தைவான் உள்ளிட்ட நாட்டை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் கோவில், கோவிலாக சென்று வழிபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சீர்காழி அருகே திருவெண்காடு புதன் ஸ்தலமான சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் வழிபாடு மேற்கொண்டனர்.

அப்போது கோவிலுக்கு வந்த உள்ளூர் பக்தர்கள் வெளிநாட்டவர்கள் ஓம் நமச்சிவாய என தமிழில் உச்சரித்து பக்தி பரவசத்தோடு வழிபாடு செய்வதை வியந்து பார்த்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us