'அப்பா, மகன் சண்டையை மறைக்க மாம்பழம் விற்கின்றனர்' வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலடி
'அப்பா, மகன் சண்டையை மறைக்க மாம்பழம் விற்கின்றனர்' வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலடி
'அப்பா, மகன் சண்டையை மறைக்க மாம்பழம் விற்கின்றனர்' வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலடி
ADDED : ஜூலை 03, 2025 06:10 AM

சிதம்பரம் : ''தி.மு.க., ஆட்சியில் பொதுமக்களில் ஒவ்வொரு நபரும் பயனடைந்துள்ளனர்'' என தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
சிதம்பரத்தில் அவர் அளித்த பேட்டி:
மாம்பழ விவசாயிகளுக்கு இங்கு ஆயிரம் பிரச்னைகள் உள்ளன. அதையெல்லாம் காது கொடுத்து கேட்டு, அவர்கள் பிரச்னைகளை களைவதோடு, விவசாயிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், எது பற்றியும் கவலைப்படாமல் அமெரிக்கா சென்றுள்ளார் என, என்னைக் குறித்து, அவதூறு தகவல் சொல்லி உள்ளார் பா.ம.க., தலைவர் அன்புமணி.
தமிழகத்தில் இப்படியொரு அப்பா - மகன் சண்டையை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அந்த சண்டையை மறைக்க, இருவரும் மாம்பழம் விற்கின்றனர். அவர்களுக்கு என்ன பிரச்னை என்று யாருக்கும் புரியவில்லை.
எதற்கெடுத்தாலும், தி.மு.க.,வை திட்டுவதையே வாடிக்கையாக்கி உள்ளனர். அவர்களுக்குள் ஏற்பட்டிருப்பது கொடுக்கல் - வாங்கல் பிரச்னையா, பதவி சண்டையா, குடும்ப சண்டையா என தெரியவில்லை. அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு தெரிந்திருக்கலாம்.
ஆனால், அதை மறைக்கவே, இவர்கள் சண்டைக்கு பின்னணியில் தி.மு.க., இருப்பது போல பேசி மடை மாற்றம் செய்யப் பார்க்கின்றனர்.
இவ்வாறு கூறினார்.