Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/'வந்தே பாரத்' சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

'வந்தே பாரத்' சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

'வந்தே பாரத்' சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

'வந்தே பாரத்' சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

ADDED : ஜன 03, 2024 12:04 AM


Google News
சென்னை:'வந்தே பாரத்' சிறப்பு ரயில்கள், வரும் 31ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளன.

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை சென்ட்ரல் - கர்நாடகா மாநிலம் மைசூரு இடையே இயக்கப்படும், 'வந்தே பாரத்' சிறப்பு ரயில், இன்று முதல் ஜன., 31ம் தேதி வரை, வாரந்தோறும் புதன் கிழமைகளில் நீட்டித்து இயக்கப்பட உள்ளது

சென்னை சென்ட்ரல் - கேரளா மாநிலம், கோட்டயத்துக்கு ஞாயிறுகளில் இயக்கப்படும், 'வந்தே பாரத்' சிறப்பு ரயில், வரும் 7 முதல் 14ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்

கோட்டயம் - சென்னை சென்ட்ரலுக்கு வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இயக்கப்படும், 'வந்தே பாரத்' சிறப்பு ரயில், வரும் 8 முதல் 15 வரை நீட்டித்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us