Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

ADDED : ஜன 30, 2024 10:47 PM


Google News
மதுரை : மதுரை வழியாக இயக்கப்படும் தாம்பரம் -- நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் சேவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து மாலை 4:35 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரயில் (06012) பிப்.4, 11, 18, 25, மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் அதிகாலை 4:10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து காலை 8:05 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரயில் (06011) பிப்.5, 12, 19, 26, மார்ச் 4, 11, 18, 25, ஏப். 1 ஆகிய திங்கள் கிழமைகளில் இரவு 8:55 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று (ஜன.31) காலை 8:00 மணி முதல் துவங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us