பாஜக சார்பில் சமத்துவ பொங்கல் விழா
பாஜக சார்பில் சமத்துவ பொங்கல் விழா
பாஜக சார்பில் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 13, 2024 07:19 PM

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பூம்புகாரில் பாஜக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட பாஜக தலைவரும், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அமைப்பாளருமான அகோரம் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் முருகையன், மாவட்டச் செயலாளர் காத்தலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் அணி மாவட்ட தலைவர் ராஜலட்சுமி வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் திரளான பாஜக மகளிர் அணியினர் பொங்கலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து சிறுவர்கள் மற்றும் மகளிருக்கு உறியடி, இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் மகளிர் அணி பொறுப்பாளர்கள் பிரபாவதி, நர்மதா உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பாஜக தலைவர் முத்துக்குமார் நன்றி கூறினார்.