தொடங்கியது அ.தி.மு.க., மா. செ. கூட்டம்; நிர்வாகிகளுடன் இ.பி.எஸ். முக்கிய ஆலோசனை
தொடங்கியது அ.தி.மு.க., மா. செ. கூட்டம்; நிர்வாகிகளுடன் இ.பி.எஸ். முக்கிய ஆலோசனை
தொடங்கியது அ.தி.மு.க., மா. செ. கூட்டம்; நிர்வாகிகளுடன் இ.பி.எஸ். முக்கிய ஆலோசனை
ADDED : மே 29, 2025 01:23 PM

சென்னை: சென்னையில் அ.தி.மு.க.,வின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று (மே 29) தொடங்கியது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் தொடங்கியுள்ளது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.
முதல்கட்டமாக புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் இ.பி.எஸ்., ஆலோசனையை தொடங்கி உள்ளார்.
நாளை நீலகிரி,திருச்சி, கரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்துகிறார்.
இரு நாட்கள் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல், அது தொடர்பான பூத் கமிட்டி பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது. அ.தி.மு.க.,வில் யாருக்கு ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு என்பது பற்றியும் பேசப்படும் என்று தெரிகிறது.