ADDED : செப் 11, 2025 02:14 AM

சென்னை:சென்னை அடையாறு காந்தி நகரில் வசிப்பவர் டாக்டர் இந்திரா. இவரது வீட்டில், நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோ தனை நடத்தினர்.
இதையொட்டி, அவரது வீட்டின் முன், துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதேபோல், மேற்கு மாம்பலத்தில் சுப்பிரமணியன் என்பவரது வீட்டிலும், வேளச்சேரியில் தொழில் அதிபர் பிஷ்னோய் என்பவரது வீடு உட்பட, சென்னையில் ஐந்து இடங்களில் சோதனை நடந்தது.
ஹரியானா மாநிலத்தில் நடந்து வரும், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக, இந்த சோதனை நடத்தப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோதனையில், பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.