தேர்தல் அறிக்கை தயாரிப்பு தமிழக காங்., ஆலோசனை
தேர்தல் அறிக்கை தயாரிப்பு தமிழக காங்., ஆலோசனை
தேர்தல் அறிக்கை தயாரிப்பு தமிழக காங்., ஆலோசனை
ADDED : ஜன 13, 2024 12:20 AM
சென்னை:தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் கட்ட ஆலோசனை கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. குழு உறுப்பினர் பிரவின் சக்கரவர்த்தி, தமிழக காங்கிரஸ் துணை அமைப்புகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின், தமிழக காங்., தலைவர் அழகிரி கூறியதாவது:
தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் விவாதித்தோம். பொது மக்களுடனும், தொழிற்சங்க நிர்வாகிகளுடனும் கலந்துரையாடல் கூட்டம் நடத்தும் தேதியை பின்னர் அறிவிப்போம்.
ஏற்கனவே லோக்சபா தேர்தல் பணிகளை துவக்கி விட்டோம். இதுவரை, 20 லோக்சபா தொகுதிகளில், பூத் கமிட்டி பயிற்சி பாசறை மாநாடுகள் நடத்தப்பட்டு உள்ளன. அகில இந்திய அளவில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி குழுவுக்கு, முன்னாள் அமைச்சர் சிதம்பரம் தலைவராக இருக்கிறார்.
தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக, அடுத்தகட்ட ஆலோசனை கூட்டம் விரைவில் நடத்தப்படும். கார்த்தி சிதம்பரம் தொடர்பான, உட்கட்சி விவகாரங்களை வெளியில் பேசும் பழக்கம் எனக்கு கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.