துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு விலை உயர்வு
துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு விலை உயர்வு
துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு விலை உயர்வு
ADDED : பிப் 11, 2024 01:29 AM
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ.200 உயர்ந்து ரூ.13,100, உளுந்தம் பருப்பு லயன் 100 கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ரூ.10,300, பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ.300 குறைந்து ரூ.10,300, குண்டூர் வத்தல் 100 கிலோவிற்கு ரூ.2000 குறைந்து ரூ.16,000 முதல் ரூ. 19,000 என விற்கப்படுகிறது.
இங்கு க.எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.20 குறைந்து ரூ.2780, ந.எண்ணெய் 15 கிலோ ரூ.6930, பாமாலின் 15 கிலோ ரூ.1370, சர்க்கரை 50 கிலோ ரூ.2050, ரவை 30 கிலோ ரூ.1480, மைதா 90 கிலோ ரூ.4440, பொரிகடலை 55 கிலோ ரூ.5000 என விற்கப்படுகிறது.
பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோவிற்குரூ.300 உயர்ந்து ரூ. 10,500, கொண்டைக்கடலை 100 கிலோவிற்கு ரூ. 25 உயர்ந்து ரூ.6750, பட்டாணி பருப்பு 100 கிலோ ரூ.6400, மல்லி 40 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.3350 முதல் ரூ.3600, மல்லி நாடு 40 கிலோ ரூ.2600 முதல் ரூ.3000 என விற்பனை செய்யப்படுகிறது.
உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவிற்கு ரூ.300 குறைந்து ரூ.12,000, தொலிபருப்பு 100 கிலோ ரூ.10,400, முண்டு வத்தல் 100 கிலோவிற்கு ரூ.1000 உயர்ந்து ரூ.16,000 முதல் ரூ.18,000, உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோ ரூ. 9200, கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.5600, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2700 என விற்பனை செய்யப்படுகிறது.