ADDED : ஜூன் 30, 2025 02:26 AM
ம.தி.மு.க., நிர்வாகக்குழுக் கூட்டம் முடிந்த பின், வைகோ அளித்த பேட்டி:
சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றிக்காக உழைப்போம். செப்., 15ல் திருச்சியில் மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது. இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்போம் என சொல்லவில்லை.
கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது எல்லா கட்சியினரும் ஆசைப்படுவதுதான். அது குறித்தும் கூட, எங்கள் நிர்வாகிகள் வலியுறுத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முதன்மை செயலர் துரை வைகோ கூறுகையில், ''குறைந்தபட்சம் அங்கீகாரம் பெற வேண்டும் என, கட்சி நிர்வாகிகள் நினைக்கிறோம்.
''அதற்காக இரட்டை இலக்கமான 12ல், வரும் சட்டசபைக்கு போட்டியிட வேண்டும் என, திருச்சியில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தேன். என்னுடைய விருப்பம் அது. ஆனால், தலைமைதான் முடிவெடுக்க வேண்டும்,'' என்றார்.