Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அமைச்சரின் பதிலை கேட்டு சிரிப்பதா ? அழுவதா? அண்ணாமலை பேட்டி

அமைச்சரின் பதிலை கேட்டு சிரிப்பதா ? அழுவதா? அண்ணாமலை பேட்டி

அமைச்சரின் பதிலை கேட்டு சிரிப்பதா ? அழுவதா? அண்ணாமலை பேட்டி

அமைச்சரின் பதிலை கேட்டு சிரிப்பதா ? அழுவதா? அண்ணாமலை பேட்டி

UPDATED : ஆக 03, 2024 04:49 PMADDED : ஆக 03, 2024 02:13 PM


Google News
Latest Tamil News
ஈரோடு: ‛‛ அதிகரித்து வரும் கொலை சம்பவங்கள் தொடர்பாக அமைச்சர் ரகுபதி கூறும் பதிலைக் கேட்டு சிரிப்பதா? அழுவதா? என தெரியவில்லை, '' என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

குற்றச்சாட்டு


அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: போலீஸ் மீதான அச்சம் போய் விட்டதால், நாள்தோறும் 15 கொலை நடக்கிறது. தற்போது கொலை சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இதற்கு, போலீசாரின் கைகள் கட்டப்பட்டதே காரணம். போலீஸ் ஸ்டேசனில் போலீசார் வேலை செய்வதில்லை. அதிக கொலை நடப்பது தான் எங்களின் குற்றச்சாட்டு. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பது தெளிவாகி உள்ளது. கொலை தொடர்பாக கேள்வி எழுப்பினால், அமைச்சரின் பதிலை கேட்டு சிரிப்பதா? அழுவதா? எனத் தெரியவில்லை.

சந்தேகம்


காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது சந்தேகம் உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார். ஆனால், துரைமுருகன், தி.மு.க., கர்நாடக அரசிடம் பணம் வாங்கிவிட்டதா என்பது எனது சந்தேகம். இதுவரை கர்நாடகா காங்கிரஸ் அரசை ஒரு வார்த்தை கூட அவர்கள் விமர்சிக்கவில்லை. அறிக்கை விடவில்லை.

சிவக்குமார் உள்ளிட்டோர் சொல்வது தவறு என சொன்னது அறிக்கை விட்டது கிடையாது. அவர்கள் தவறு செய்துவிட்டார்கள் என விமர்சனம் செய்யவில்லை. கர்நாடகாவில் தி.மு.க.,வினருக்கு தொழில் உள்ளது. விமர்சித்தால் அதற்கு பாதிப்பு வரும் என அஞ்சுகின்றனர். காங்., அரசு செய்யும் தப்பை ஏன் தி.மு.க., கேட்கவில்லை என மக்கள் நினைக்கின்றனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

தொடர் உண்ணாவிரதம்

ஈரோட்டில் மாலையில் மீண்டும் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் 20 ம் தேதி முதல் பா.ஜ., சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியாவில் தான் அதிக அணைகள் உள்ளன. அணைகளை பாதுகாப்பது, கண்காணிப்பது உள்ளிட்டவற்றுக்கு, மத்திய அரசு கொண்டு வந்த அணைகள் பாதுகாப்பு சட்டம் மிகவும் முக்கியம். பரம்பிகுளம் ஆழியாறு அணை மதகு சரி செய்யப்படாமல் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. அணை பாதுகாப்புக்காக தமிழக அரசு, மத்திய அரசின் சட்டத்தை அமல்படுத்தி மாநில அளவில் குழுவை உருவாக்கி அணைகள் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us