கள்ளச்சாராயம் விற்கும் தி.மு.க.,வினர்
கள்ளச்சாராயம் விற்கும் தி.மு.க.,வினர்
கள்ளச்சாராயம் விற்கும் தி.மு.க.,வினர்
ADDED : செப் 17, 2025 04:18 AM

சென்னை : தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை:
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, தி.மு.க., வார்டு கவுன்சிலரும், அக்கட்சி இளைஞரணி நிர்வாகியுமான சுரேஷ்குமார், கள்ளச்சாராயம் விற்றதாக, சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசுக்கு சொந்தமான, 'டாஸ்மாக்' கடைகளுக்கு, மது வகைகளை வினியோகிக்கும் உரிமம் பெற்ற, மதுபான ஆலைகளை, தி.மு.க., அமைச்சர்கள் நடத்துகின்றனர்.
கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள், கள்ளச்சாராயத்தை விற்று, பலரின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். கள்ளச்சாராயத்தின் கொடிய வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள தி.மு.க.,வினரால் தமிழகம், 15 ஆண்டுகள் பின்னுக்கு சென்று உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.