தி.மு.க., - எம்.பி.,க்கள் இன்று ஆலோசனை
தி.மு.க., - எம்.பி.,க்கள் இன்று ஆலோசனை
தி.மு.க., - எம்.பி.,க்கள் இன்று ஆலோசனை
ADDED : செப் 23, 2025 07:07 AM

சென்னை : தி.மு.க., - எம்.பி.,க்களின் ஆலோசனைக் கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் நடக்கிறது.
பா.ஜ., டில்லி மேலிடத் தலைவர்களுடன், தி.மு.க., ரகசிய உறவு வைத்துள்ளது என்ற குற்றச்சாட்டை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தொடர்ந்து கூறி வருகிறார்.
நாகப்பட்டினத்தில் விஜய் பேசியபோது, 'என் பிரசாரத்திற்கு விதிக்கும் நிபந்தனைகளை, பிரதமர் மோடி அல்லது அமித் ஷாவுக்கு விதிக்க முடியுமா' என, கேள்வி எழுப்பினார்.
மேலும், மத்திய அரசுடன் தி.மு.க.,வுக்கு மறைமுக தொடர்பு உள்ளது எனவும் விமர்சித்தார்.
அவரது குற்றச்சாட்டை முறியடிப்பதோடு, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க, தி.மு.க., முடிவு செய்து உள்ளது.
இது குறித்து ஆலோசிப்பதற்காக, தி.மு.க., - எம்.பி.,க்களின் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது.
அதில், லோக்சபா தொகுதிகள் குறைப்பு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், நீட் மற்றும் கல்வி நிதி நிறுத்தம் ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.