மத்திய அமைச்சர் முருகனுக்கு தி.மு.க., திடீர் அழைப்பு
மத்திய அமைச்சர் முருகனுக்கு தி.மு.க., திடீர் அழைப்பு
மத்திய அமைச்சர் முருகனுக்கு தி.மு.க., திடீர் அழைப்பு
ADDED : ஜூன் 30, 2025 02:31 AM

சென்னை: ''மத்திய அரசிடம், கல்வித்துறைக்கு நிதி பெற்றுத்தர, 'ஓரணியில் தமிழகம்' இயக்கத்தில் சேர, மத்திய அமைச்சர் முருகனையும் அழைக்கிறோம்,'' என, தி.மு.க., மாணவர் அணி செயலர் ராஜிவ்காந்தி தெரிவித்தார்.
சென்னை அறிவாலயத்தில், அவரது பேட்டி:
தமிழகத்தின் மண், மானம், மொழி காக்கும் போராட்டத்தில், தமிழர்களாகிய நாம் ஓரணியில் திரள வேண்டும் என, முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில், கட்சி, மதங்களை கடந்து, ஓரணியில் தமிழர்கள் நின்றனர். ஒரு தாய் பிள்ளையாக வாழ்ந்த நிலத்தில், மீண்டும் ஜாதிய வன்மத்தை துாண்டும் வேலையை, அண்ணாமலை செய்கிறார்.
பா.ஜ.,வில் சேருவதற்கு முன், அண்ணாமலை 'நீட்' தேர்வு வேண்டாம் என்றும், இடஒதுக்கீடு சரி என்றும் பேசினார். பா.ஜ.,வில் சேர்ந்த பின், அவற்றை எதிர்க்கிறார்.
அண்ணாமலை பட்டம் படித்தவரா, தமிழக மக்களின் உணர்வை புரிந்தவரா என, சந்தேகம் வருகிறது. பள்ளி, கல்லுாரிகள், அனைவருக்கும் ஒன்றுதான். ஓரணியில் தமிழகம் இயக்கத்தில் சேர, மத்திய அமைச்சர் முருகனையும் அழைக்கிறோம். மத்திய அமைச்சராக, தமிழக கல்வித் துறைக்கு நிதியை பெற்றுத் தாருங்கள். கருத்தில் எங்களுடன் ஒன்றிணைந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.