ADDED : ஜன 03, 2024 11:35 PM
சென்னை:கொரோனா தொற் றால் நேற்று, 29 பேர் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 317 பேருக்கு கொரோனா பரி சோதனை செய்யப் பட்டது. அதில் சென்னையில் 8; செங்கல்பட்டில் 6; காஞ்சிபுரத்தில் 4; திருவள்ளூரில் 3; மதுரை, கோவையில் தலா 2 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என, 29 பேருக்கு தொற்று உறுதியானது.
சிகிச்சையில் இருந்த வர்களில் 38 பேர் குணமடைந்த நிலையில், 178 பேர் தொடர் சிகிச்சையில் இருப்பதாக, பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.