தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுக்கு ஒத்தி வைக்க வேண்டும்: தி.மு.க., கூட்டிய கூட்டத்தில் தீர்மானம்
தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுக்கு ஒத்தி வைக்க வேண்டும்: தி.மு.க., கூட்டிய கூட்டத்தில் தீர்மானம்
தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுக்கு ஒத்தி வைக்க வேண்டும்: தி.மு.க., கூட்டிய கூட்டத்தில் தீர்மானம்

முக்கியமான நாள்
கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் துவக்க உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
கூட்டாட்சி
ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளோம். இந்திய கூட்டாட்சியை காக்கும் வரலாற்றின் மிக முக்கியமான நாள் இது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளோம். இது எண்ணிக்கை பற்றியதல்ல; அதிகாரம் பற்றியது.
மாநில உரிமைகள்
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். இது, தொகுதி மறு சீரமைப்புக்கு எதிரான போராட்டம் அல்ல; நியாயமான மறுசீரமைப்பை வலியுறுத்துவதற்காக எடுக்கப்படும் முயற்சி.
12 தொகுதிகள்
தொகுதி குறைந்தால் நிதி பெறுவதில் சிரமம் ஏற்படும். அனைத்து தரப்பு மக்களின் விளைவாகவே தேசம் உருப்பெற்றது. கூட்டாட்சிக்கு வரும் சோதனைகளை ஜனநாயக அமைப்புகள் தடுத்து நிறுத்தின.
வலிமை குறையும்
மாநில உரிமையை நிலைநாட்ட தொடர் நடவடிக்கை அவசியம். ஒற்றுமை உணர்வோடு அனைவரும் ஒன்றுபட்டு போராடினால் தான் வெற்றி பெற முடியும். எந்த சூழ்நிலையிலும் நமது பிரதிநிதித்துவம் குறையக்கூடாது. குறையவும் விடக்கூடாது. மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை குறைந்தால், நமது எண்ணங்களை சொல்வதற்கான வலிமை குறையும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
மம்தா புறக்கணிப்பு
தி.மு.க., கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, பிஜூ ஜனதாதளம், ஆம் ஆத்மி, ஜனசேனா, பாரதிய ராஷ்ட்ரீய சமிதி, கேரளாவை சேர்ந்த கட்சிகள் என 8 மாநிலங்களை சேர்ந்த 23 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கூட்டம்
கூட்டம் முடிவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக, கூட்டு நடவடிக்கைக்குழுவின் அடுத்த கூட்டம், ஹைதராபாத்தில் நடக்கும் என்று அறிவித்தார்.