தமிழகத்தில் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும்
தமிழகத்தில் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும்
தமிழகத்தில் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும்
ADDED : செப் 01, 2025 03:49 AM
அனைத்து மட்டத்திலும், காங்கிரசுக்கு உரிய மரியாதையை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க., கொடுத்தாக வேண்டும். தமிழகத்தில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறோம். இதற்கான குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். தேர்தல் கமிஷனை கையில் வைத்துக் கொண்டு, ஓட்டு திருட்டில் பா.ஜ., ஈடுபடுகிறது. இதை, தமிழக மக்களிடம் கொண்டு செல்ல, செப்., 7ல் நெல்லையில் காங்., சார்பில் மாநாடு நடத்த உள்ளோம்.
கர்நாடகாவில், ஓட்டுப்பதிவில் முறைகேடு இருக்கக்கூடாது என்பதற்காக, அங்கு நடக்கவிருக்கும் மாநகராட்சி தேர்தலில், பழைய ஓட்டுச்சீட்டு முறையை, அம்மாநில காங்., அரசு அமல்படுத்த உள்ளது. இதே நிலையை, காங்., ஆளும் அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வர உள்ளோம். மத்திய அரசு, தமிழகத்துக்கான கல்வி நிதி, 2,152 கோடி ரூபாயை கொடுக்க மறுப்பதை கண்டித்து, தமிழகம் முழுதும் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.
-- கோபிநாத், தேசிய செயலர், காங்கிரஸ்