கோவை ஏர்போர்ட்டில் பெண் பயணியிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல்!
கோவை ஏர்போர்ட்டில் பெண் பயணியிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல்!
கோவை ஏர்போர்ட்டில் பெண் பயணியிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல்!
ADDED : ஜூன் 14, 2025 12:34 PM

கோவை; கோவை விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவரிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
கோவையில் இருந்து பெங்களூருக்கு இண்டிகோ நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது அதில் பயணம் செய்ய வந்திருந்த பெண் பயணியிடம் விமான நிலைய பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது பெண் பயணியின் கைப்பையில் குண்டு இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. உடனடியாக அவரை தனிமைப்படுத்தி கடுமையாக சோதனை செய்தனர். பின்னர் அவர் வைத்திருந்த கைப்பையை திறந்து பார்த்த போது, உள்ளே துப்பாக்கி தோட்டா ஒன்று இருப்பது கண்றிப்பட்டது.
இந்த தோட்டா, எம்.எம்., ரக துப்பாக்கி குண்டு வகையைச் சேர்ந்தது ஆகும். இதையடுத்து அந்த பெண் பயணி சரளா ராமகிருஷ்ணன் என்பவரை முழுமையாக சோதனை நடத்தினர்.
அதன் பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி தோட்டாவும் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.