கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 2 நாள் ஸ்டிரைக் அறிவிப்பு
கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 2 நாள் ஸ்டிரைக் அறிவிப்பு
கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 2 நாள் ஸ்டிரைக் அறிவிப்பு
ADDED : ஜன 03, 2024 11:08 PM
சென்னை:கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு, 15 சதவீதம் ஊதிய உயர்வு சமீபத்தில் வழங்கப்பட்டது.
இதை ஏற்காமல், '20 சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும்; வீட்டு வாடகைப்படி உயர்த்தி வழங்க வேண்டும்' எனக்கோரி, கூட்டுறவு சம்மேளன ஊழியர் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள், சென்னை உட்பட, 23 மாவட்ட கூட்டுறவு வங்கிகள் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து, கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் தமிழரசு கூறுகையில், ''வரும், 5ம் தேதி வங்கிகள் முன் ஒரு நாள் தர்ணா போராட்டம்; 10ம் தேதி மாநில அளவில் சென்னையில் தர்ணா போராட்டம்; வரும், 23, 24ல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.