Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்: கோரிக்கை வைத்த திருநங்கை டாக்டர் ஜென்சி

வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்: கோரிக்கை வைத்த திருநங்கை டாக்டர் ஜென்சி

வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்: கோரிக்கை வைத்த திருநங்கை டாக்டர் ஜென்சி

வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்: கோரிக்கை வைத்த திருநங்கை டாக்டர் ஜென்சி

ADDED : ஜூன் 22, 2025 05:03 PM


Google News
Latest Tamil News
சென்னை; ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்று, உதவி பேராசிரியராக சேர்ந்த திருநங்கை ஜென்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறி உள்ளார். தமக்கு அரசு பணி வழங்க அவர் ஆவண செய்ய வேண்டும் என்று ஜென்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் ஆங்கிலத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் டாக்டர் ஜென்சி. இதன் மூலம் அந்த கல்லூரியில் ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். அவருக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து உள்ளனர்.

இந் நிலையில் முதல்வர் ஸ்டாலின், டாக்டர் ஜென்சி என்று தமது முகநூலில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி உள்ளதாவது;

வாழ்த்துகள் Dr. ஜென்சி! உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக்கரை சேரட்டும். தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும்.

இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

முதல்வர் வாழ்த்து குறித்து ஜென்சி கூறியதாவது;

டாக்டர் ஜென்சி என்று முதல்வர் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு அரசு கல்லூரியில் எனக்கு பணி நிரந்தரம் செய்து வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us