மதுரையில் முதல்வர் ஸ்டாலினின் ரோடு ஷோ: சகோதரர் அழகிரியையும் சந்தித்தார்
மதுரையில் முதல்வர் ஸ்டாலினின் ரோடு ஷோ: சகோதரர் அழகிரியையும் சந்தித்தார்
மதுரையில் முதல்வர் ஸ்டாலினின் ரோடு ஷோ: சகோதரர் அழகிரியையும் சந்தித்தார்

மதுரை: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற 'ரோடு ஷோ' நிகழ்ச்சி நடந்தது.3: 45 மணி நேரம் நடந்த இந்த ரோடு ஷோவின் போது, ஸ்டாலின் சுமார் 5 கி.மீ., தூரம் நடந்து சென்றார். இதனைத் தொடர்ந்து, டிவிஎஸ் நகரில் உள்ள சகோதரர் அழகிரி வீட்டிற்கு சென்ற ஸ்டாலின் அவரை சந்தித்து பேசினார்.
தி.மு.க., மாநில பொதுக்குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் நாளை (ஜூன் 1) நடக்கிறது. இதற்காக பிரம்மாண்டமான அரங்கம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாலையில் பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை 16.5 கி.மீ., தொலைவுக்கு நடக்கும் ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்தது.
பெருங்குடி சந்திப்பிலிருந்து 'ரோடு ஷோ' துவங்கி அவனியாபுரம், மருதுபாண்டியர் சிலை, பெரியார் சிலை, வில்லாபுரம் ஆர்ச் வரையுள்ள ரோடு, ஜெயவிலாஸ் சந்திப்பு முதல் சோலையழகுபுரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, ஜீவாநகர் சந்திப்பு, சந்தராஜபுரம் மார்க்கெட், டி.வி.எஸ்., நகர் மேம்பாலம், மாடக்குளம் சந்திப்பு, ஜி.ஆர்.டி., ஓட்டல் ரோடு, பழங்காநத்தம், ரவுண்டானா, பைபாஸ் ரோடு, காளவாசல் சந்திப்பு, குரு தியேட்டர் சந்திப்பு வரையுள்ள திண்டுக்கல் ரோடு, ஆரப்பாளையம் வரை திறந்த வாகனத்தில் நின்றபடி சென்று மக்களை சந்தித்தார். முதல்வர், சாலையில் இறங்கி பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். 3: 45 மணி நேரம் நடந்த இந்த ரோடு ஷோவின் போது, ஸ்டாலின் சுமார் 5 கி.மீ., தூரம் நடந்து சென்றார்.
இதனையடுத்து அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டனர்.
முன்னாள் மேயர் சிலை திறப்பு
ரோடு ஷோ முடிந்த பிறகு, மதுரையின் முதல் மேயர் முத்துவின் வெண்கல சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அழகிரி உடன் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து டிவிஎஸ் நகர் சென்ற முதல்வர் ஸ்டாலின், அண்ணன் அழகிரியை சந்தித்து பேசினார். முதல்வராக பதவியேற்ற பிறகு, மதுரையில் அழகிரியை ஸ்டாலின் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னர், சென்னை சென்ற அழகிரி ஸ்டாலினை சந்தித்து பேசியிருந்தார்.
பந்தல்குடி கால்வாயில் ஆய்வு
முன்னதாக, ஸ்டாலின் வருகைக்காக பந்தல்குடி கால்வாய் துணி வைத்து மறைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், அந்த கால்வாயை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர்கள், மேயர், அதிகாரிகள் உடன் இருந்தனர்.