மகளிருக்கு எதிரான குற்றங்கள் குறைவு; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
மகளிருக்கு எதிரான குற்றங்கள் குறைவு; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
மகளிருக்கு எதிரான குற்றங்கள் குறைவு; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ADDED : ஜூன் 14, 2025 03:14 AM

சென்னை : முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின், தரவுகளின்படி, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள், மிகவும் குறைவாக நடக்கும் மாநிலங்களில், தமிழகம் ஒன்றாக உள்ளது. போக்சோ குற்றங்கள் தொடர்பாக, எவ்வித அச்சமும் இல்லாமல், போலீஸ் நிலையத்தில், நம்பிக்கையோடு புகார் அளிக்கும் விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது.
அச்சமின்றி புகாரளித்தால்தான் குற்றவாளியை முதல் குற்றத்தின்போதே கைது செய்து, தண்டனை பெற்று தர முடியும். இத்தகைய நபர்கள், மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க, இது மிக அவசியம்.
ஏற்கனவே நான் கூறியது போல, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில், விரைவான விசாரணை, அதிகபட்ச தண்டனை, முன்ஜாமீன் இல்லை என்பதே அரசின் கொள்கை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.