அடுக்குமாடி வணிக வளாகம் வழியாக மெட்ரோ ரயில்; இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் அமைகிறது
அடுக்குமாடி வணிக வளாகம் வழியாக மெட்ரோ ரயில்; இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் அமைகிறது
அடுக்குமாடி வணிக வளாகம் வழியாக மெட்ரோ ரயில்; இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் அமைகிறது

சென்னை, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சென்னை, திருமங்கலம் அடுக்குமாடி கட்டடம் வழியாக, மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மூன்று வழித்தடங்களில் 116.1 கி.மீ., துாரம் அமைகிறது. இதில், மாதவரம் - சோழிங்கநல்லுார் மெட்ரோ ரயில் தடத்தில், திருமங்கலம் சந்திப்பு மெட்ரோ ரயில் நிலையம், வணிக வளாகத்துடன் கூடிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.
ஒன்பது மாடிகளுடன், 'ஏ, பி, சி' என, மூன்று கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இத்திட்டத்தின் மையமாக ஒருங்கிணைக்கப்பட்ட இரண்டு மாடிகளை கொண்ட ரயில் நிலையம் அமைகிறது. இந்த திட்டம் 6.85 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான, டெண்டர் வெளியிடப்பட்டு, கட்டுமான பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த கட்டிடத்தில் பல்வேறு அலுவலகங்கள், சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மூன்று நிலைகளில் சுரங்க வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளன.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருப்பது போல, சென்னையில் அடுக்குமாடி கட்டிடங்கள் வழியாக மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ ரயில் செல்லும் வகையில் இத்திட்டம் அமைக்கப்படுவது, இதுவே முதல் முறை இவ்வாறு அவர்கள் கூறினர்.