Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சென்னையில் 2 நாட்கள் புறநகர் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னையில் 2 நாட்கள் புறநகர் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னையில் 2 நாட்கள் புறநகர் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னையில் 2 நாட்கள் புறநகர் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Latest Tamil News
சென்னை: சென்னையில் 24 புறநகர் மின்சார ரயில்களின் சேவை 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

சென்னை கடற்கரை ரயில்நிலையத்தில் புதிய ரயில்வே மேம்பால பணிகள் மே 17ம் தேதி இரவு 10 மணிமுதல் மே 18ம் தேதி காலை 8 மணி வரை நடைபெறுகிறது. இதனால் பணிகள் நடைபெறும் நேரங்களில் கடற்கரை-வேளச்சேரி, ஆவடி-திருவள்ளூர் இடையே இயங்கும் 24 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இந் நிலையில் பயணிகள் வசதிக்காக மே 18 காலை 5 மணி முதல் 8 மணி வரை 30 நிமிட இடைவெளியில் 10 சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மேலும் அதே நாளில் ஆவடி திருவள்ளூர் இடையே காலை 6 முதல் 7.05 மணி வரை 30 நிமிஷங்கள் இடைவெளியில் 3 ரயில்களும், ஆவடியில் இருந்து காலை 5 மணிக்கு அரக்கோணத்துக்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us