ரூ.88 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை; ஒரே நாளில் இருமுறை உயர்வு
ரூ.88 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை; ஒரே நாளில் இருமுறை உயர்வு
ரூ.88 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை; ஒரே நாளில் இருமுறை உயர்வு

சென்னை: சென்னையில் இன்று (அக்., 01) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இருமுறை அதிகரித்துள்ளது. பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் (செப் 29), ஆபரண தங்கம் கிராம், 10,770 ரூபாய்க்கும், சவரன், 86,160 ரூபாய்க்கும் விற்பனையானது. சவரனுக்கு, 720 ரூபாய் அதிகரித்து, 86,880 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது.
இன்று (அக்., 01) காலை 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,120க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,890க்கு விற்பனையானது.
இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று மாலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. அதாவது ஒரே நாளில் ஒரு பவுன் ரூ.720 அதிகரித்து ரூ.87,600க்கு விற்பனையாகி வருகிறது. இதன்மூலம், ஒரு பவுன் ரூ.88 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஒரு கிராம் ரூ.10,950க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,480 அதிகரித்து அதிர்ச்சியளித்துள்ளது.


