Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சென்னை-பெங்களூரு சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து முடக்கம்; 10 கி.மீ., காத்து கிடக்கும் வாகனங்கள்

சென்னை-பெங்களூரு சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து முடக்கம்; 10 கி.மீ., காத்து கிடக்கும் வாகனங்கள்

சென்னை-பெங்களூரு சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து முடக்கம்; 10 கி.மீ., காத்து கிடக்கும் வாகனங்கள்

சென்னை-பெங்களூரு சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து முடக்கம்; 10 கி.மீ., காத்து கிடக்கும் வாகனங்கள்

Latest Tamil News
சென்னை: சரக்கு லாரி பழுதானதால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 6 மணி நேரமாக 10 கி.மீ., தொலைவுக்கு ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாடம் சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.43 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 6 மாதங்களாக இந்த பணியில் அதிகாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலை பணிகள் காரணமாக, இருபுறமும் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு அதன் வழியாக அனைத்து வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் சூளகிரியில் இருந்து சென்னைக்கு கிரானைட் கற்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று, வேகத்தடை மீது ஏறி இறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக வாகனம் பழுதாகி நின்றது.

குறுகிய சாலை என்பதால் அதன் வழியே வேறு எந்த வாகனங்களும் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. கிட்டத்தட்ட நள்ளிரவு 12 மணி முதல் போக்குவரத்து முடங்க ஆரம்பித்தது. கடந்த 6 மணி நேரமாக எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீசார் போக்குவரத்தை சீர் செய்ய முயன்றனர். ஆனால் அந்த நடவடிக்கை பலன் அளிக்காமல் போகவே, சென்னை வழியாக செல்லக்கூடிய பாதை மட்டுமே ஒரு வழிப்பாதையாக இயக்கப்பட்டு வருகிறது.

அந்த ஒரு வழிப்பாதையில் மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஒருவழிப்பாதை பயன்படுத்தப்பட்டு வருவதால் சுமார் 10 கி.மீ., வரை வாகனங்கள் சாலையில் வரிசையாக காத்திருக்கின்றன. 6 மணி நேரம் கடந்து அங்கு போக்குவரத்து நெருக்கடி சீர் செய்யப்படாததால் மழையின் ஊடே வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us