தமிழகத்தில் 30,000 கோடி ரூபாய் மத்திய அரசு முதலீடு: நயினார் மகிழ்ச்சி
தமிழகத்தில் 30,000 கோடி ரூபாய் மத்திய அரசு முதலீடு: நயினார் மகிழ்ச்சி
தமிழகத்தில் 30,000 கோடி ரூபாய் மத்திய அரசு முதலீடு: நயினார் மகிழ்ச்சி
ADDED : செப் 22, 2025 07:13 PM

சென்னை: தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த இரு கப்பல் கட்டும் தளங்கள் அமைப்பதற்காக 30,000 கோடி ரூபாயை கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் மற்றும் மாஸகன் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட் ஆகிய இரு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
அவரது அறிக்கை:
முத்துநகராம் தூத்துக்குடிக்கு வருகைபுரிந்து ரூ.452 கோடி செலவில் தூத்துக்குடி விமான நிலையத்தைப் புதுப்பித்து ரூ.4,800 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடித்தளமிட்டு இருமாதங்களுக்குள்ளேயே ரூ.30,000 கோடி மதிப்பில் மேலும் முதலீடு செய்ய முன்வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே செய்வதில்லை என்று பொழுது புலர்ந்ததும் போலியாக புலம்பும் சிலர் இனியாவது உண்மையை உணர்ந்து திருந்த வேண்டும்.
இவ்வாறு நயினார் நகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.