ADDED : ஜன 29, 2024 05:33 AM
சிலம்பம் விளையாடுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகா காங்., அரசுக்கு, தி.மு.க., துணை போவது போல நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. 'இண்டியா' கூட்டணி முரண்பாடுகளின் மொத்த வடிவம்.
சில நாட்களில் பீஹார், மேற்கு வங்கம், பஞ்சாப்பில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்ற நிகழ்வுகள், காங்., மீது நம்பிக்கையில்லை என்பதை வெளிப்படையாக காட்டுகின்றன. சேலத்தில் நடந்த தி.மு.க., இளைஞரணி மாநாடு, பண பலம், விளம்பரத்துக்கு எடுத்துகாட்டாக உள்ளது. தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியில் யாரெல்லாம் இருக்கப் போகின்றனர் என்பதை மத்திய பா.ஜ., தலைமை தான் முடிவு செய்யும்.