அறிவியல் மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
அறிவியல் மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
அறிவியல் மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஜன 07, 2024 02:24 AM
திருநெல்வேலி:மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நாடு முழுதும் அறிவியல் மையங்கள் இயங்கி வருகின்றன. கர்நாடகா மாநிலத்தில், பெங்களூருவிலும், தமிழகத்தில் நெல்லையிலும் அறிவியல் மையங்கள் இயங்கி வருகின்றன.
நாட்டில் உள்ள, ௨௬ அறிவியல் மையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் மின்னஞ்சல் அனுப்பியதையடுத்து, அறிவியல் மையங்களில் போலீசார் தீவிர வெடிகுண்டு தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், கொக்கிரகுளம் அறிவியல் மையத்தில் போலீசார் தீவிர வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வெடி பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.