'தமிழகத்தில் எந்நேரத்திலும் பா.ஜ., ஆட்சி அமைக்கும்'
'தமிழகத்தில் எந்நேரத்திலும் பா.ஜ., ஆட்சி அமைக்கும்'
'தமிழகத்தில் எந்நேரத்திலும் பா.ஜ., ஆட்சி அமைக்கும்'
ADDED : பிப் 11, 2024 12:56 AM

வரும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பா.ஜ., தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பணிகளுக்காக, லோக்சபா மற்றும் சட்டசபை பணிக்குழு உட்பட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க., ஆட்சியில் சட்டம் - -ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. வரும் லோக்சபா தேர்தல், தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என, இளைஞர்கள், பெண்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். பா.ஜ.,வின் தேவை தமிழகத்துக்கு மிகுந்த அவசியமானது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். தமிழகத்தில் வட சென்னை முதல், கன்னியாகுமரி வரை, 39 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம்.
லோக்சபா தேர்தலுக்கு பின், சட்டசபை தேர்தல் வராமலேயே கூட, பா.ஜ., தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்ற நிலை வரலாம். அதன் முன்னோட்டமாகத் தான், முன்னாள் நிர்வாகிகள், பா.ஜ.,வுக்கு வந்த வண்ணம் உள்ளனர். நாட்டிற்கு தேசியமும், ஆன்மிகமும் உகந்தது என்ற உணர்வுக்கு தமிழக மக்கள் வந்துள்ளனர். அதனால், தமிழகத்தில் எந்த நேரத்திலும் பா.ஜ., ஆட்சி அமைக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
ராமலிங்கம்,
துணைத் தலைவர், தமிழக பா.ஜ.,