முருக பக்தர் மாநாடு: மதுரையில் ஜூன் 22ல் நடத்துகிறது பா.ஜ.,
முருக பக்தர் மாநாடு: மதுரையில் ஜூன் 22ல் நடத்துகிறது பா.ஜ.,
முருக பக்தர் மாநாடு: மதுரையில் ஜூன் 22ல் நடத்துகிறது பா.ஜ.,
ADDED : மே 17, 2025 02:18 AM

சென்னை: மதுரையில் வரும் ஜூன் 22ல், முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளதாக, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
வரும் ஜூன் 22ம் தேதி, தமிழ் கடவுள் முருகரின் பக்தர்களை ஒன்று திரட்டி, சங்கம் வளர்த்த மதுரையில் பெரிய மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இம்மாநாட்டை சிறப்பாக நடத்த, மாநில குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுடன் ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்த, மாவட்ட அளவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களின் பொறுப்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் பொறுப்பாளராக, எச்.ராஜா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.